Monday, May 15, 2006

Raam - Aaraariraaro Naaningae Paada

படம் : ராம்
பாடியவர் : கே. ஜே. யேசுதாஸ்
இசை : யுவன் ஷங்கர் ராஜா

பல்லவி
---------
ஆராரிராரோ நானிங்கே பாட
தாயே நீ கண்ணுறங்கு
என்னோட மடி சாய்ந்து (ஆராரிராரோ)
வாழும் காலம் யாவுமே
தாயின் பாதம் ஸ்வர்க்கமே
வேதம் நான்கும் சொன்னதே
அதை நான் அறிவேனே..
அம்மா என்னும் மந்திரமே
அகிலம் யாவும் ஆள்கிறதே (ஆராரிராரோ)


சரணம் - 1
------------
வேரில்லாத மரம் போல் என்னை
நீ பூமியில் நட்டாயே
ஊர் கண் எந்தன் மேலே பட்டால்
உன் உயிர் நோகத் துடித்தாயே
உலகத்தின் பந்தங்கள் எல்லாம்
நீ சொல்லித் தந்தாயே
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில்
வழிநடத்திச் சென்றாயே
உனக்கே ஓர் தொட்டில் கட்டி
நானே தாயாய் மாறிட வேண்டும் (ஆராரிராரோ)


சரணம் - 2
------------
தாய் சொல்கின்ற வார்த்தைகள் எல்லாம்
நோய் தீர்க்கின்ற மருந்தல்லவா
மண் பொன் மேலே ஆசை துறந்த
கண் தூங்காத உயிரல்லவா
காலத்தின் கணக்குகளில்
செலவாகும் வரவும் நீ
சுழல்கின்ற பூமியின் மேலே
சுழலாத பூமியும் நீ
இறைவா நீ ஆணையிடு
தாயே எந்தன் மகளாய் மாற (ஆராரிராரோ)

No comments:

Post a Comment