Wednesday, May 17, 2006

Raam - Vidigindra Pozhuthu Therindhidumaa

படம் : ராம்
பாடியவர் : மதுமிதா
இசை : யுவன் ஷங்கர் ராஜா

பல்லவி
-----------
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
விடிகின்ற பொழுது தெரிந்திடுமா
கடலலை கரையைக் கடந்திடுமா
காதலை உலகம் அறிந்திடுமா
நினைப்பது எல்லாம் நடந்திடுமா
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
(விடிகின்ற பொழுது தெரிந்திடுமா)


சரணம் - 1
-------------
உன்னாலே எனக்குள் உருவான உலகம்
பூகம்பம் இன்றி சிதறுதடா
எங்கேயோ இருந்து நீதீண்டும் நினைவே
எனை இன்னும் வாழ சொல்லுதடா
தொடுகின்ற தூரம் எதிரே நம் காதல்
தொடப்போகும் நேரம் மரணத்தின் வாசல்
காதலும் ஓர் ஆயுதமாய் மாறிடுச்சே
மெல்ல மெல்ல என்னைக் கொல்லத் துணிஞ்சிடுச்சே
தீயில் என்னை நிற்கவைச்சு சிரிக்கிறதே
தீர்ப்பு என்ன எந்தன் நெஞ்சு கேட்கிறதே
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ


சரணம் - 2
-------------
காட்டுத்தீ போல கண்மூடித்தனமாய்
என்சோகம் சுடர்விட்டு எரியுதடா
மனசுக்குள் சுமந்த ஆசைகளெல்லாம்
வாய்பொத்தி வாய்பொத்தி நகருதடா
யாரிடம் உந்தன் கதைபேச முடியும்
வார்த்தைகள் இருந்தும் மெளனத்தில் கரையும்
பச்சைநிலம் பாலைவனம் ஆனதடா
பூவனமும் போர்க்களமாய் மாறுதடா
காலம் கூடக் கண்கள் மூடிக் கொண்டதடா
உன்னை விடக் கல்லறையே பக்கமடா
(விடிகின்ற பொழுது தெரிந்திடுமா)

8 comments: