பாடல்: உயிரைத் தொலைத்தேன்
எழுதியவர்: திலீப்
பாடியவர்: திலீப்
தொகுப்பு: 'காதல் வேண்டும்' மலேசிய தமிழ் ஆல்பம்
பல்லவி
======
உயிரைத் தொலைத்தேன் அது உன்னில் தானோ
இது நான் காணும் கனவோ நிஜமோ
மீண்டும் உன்னைக் காணும் வரமே
வேண்டும் எனக்கே மனமே மனமே
விழியில் விழுந்தாய் ஆஆஆஆஆ
என்னில் எனதாய் நானே இல்லை
எண்ணம் முழுதும் நீதானே என் கண்ணே
(உயிரைத் தொலைத்தேன் அது)
சரணம்-1
========
அன்பே உயிராய்த் தொடுவேன் உன்னை
தாலாட்டுதே பார்வைகள் (அன்பே உயிராய்த்)
உனைச் சேரும் நாளை தினம் ஏங்கினேனே
நானிங்கு தனியாக அழுதேன்
விடியும் வரை கனவின் நிலை
உனதாய் இது தினம் ஏங்குது
மனம் உருகிடும் நிலை இது எந்தன்
முதல் முதல் வரும் உயிர்க் காதலில்
(உயிரைத் தொலைத்தேன் அது)
சரணம்-2
========
நினைத்தால் இனிக்கும் இளமை நதியே
உன்னோடு நான் மூழ்கினேன் (நினைத்தால் இனிக்கும்)
தேடாத நிலையில் நோகாத வழியில்
கண் பார்க்கும் இடம் எங்கும் நீதான்
விடியும் வரை கனவின் நிலை
உனதாய் இது தினம் ஏங்குது
மனம் உருகிடும் நிலை இது எந்தன்
முதல் முதல் வரும் உயிர்க் காதலில்
(உயிரைத் தொலைத்தேன் அது)
ஓ ஓ ஓ.. ஓ ஓ ஓ...
நன்றி: இந்தப் பாடலை முதன்முதலில் மின்னஞ்சலில் எனக்கனுப்பிய தோழன் தனஞ்செயனுக்கு!
No comments:
Post a Comment