Friday, October 5, 2007

ThendraalaiVandhaai - Yean Innum Mounam

பாடல்: ஏன் இன்னும் மெளனம்
ஆல்பம்: தென்றலாய் வந்தாய்
 
பல்லவி
======
பெ: ஏன் இன்னும் மெளனம் நீ பேசவில்லை
      ஏன் என்று சொல்லு என் கண்ணனே
      ஏன் இன்னும் என்னை நீ பார்க்கவில்லை
      ஏன் உந்தன் பாசம் நான் பெறவில்லை
      என் நெஞ்சம் அது துடிக்கின்றது
      உன் பேரை அது அழைக்கின்றது
      எனைச் சேராயோ கண்ணா ஆஆ (ஏன் இன்னும் மெளனம்) 
 
சரணம்-1
=======
பெ: நெஞ்சே ஆசை கொள்ளை இன்பம்
       நாளும் அது உன்பேரைச் சொல்லித் தாவிப்போனது
      அன்பில் உனைச் சேராது உள்ளம் உனைத் தீண்டாது
       ஏனோ மனம் எந்நாளும் உந்தன் நிழலாய்ப் போனது
       வானம் எனது பூமி ஏனோ நீயும் எனது காதல் ஏனோ
       இதயத்தில் தினம் காதல் பூக்கள் பூத்தபடி கண்ணா
       காதலை தினம் கொண்டாடச் சொல்லி சொன்னது கண்ணா
       தேவன் உனை நான் பார்த்த பின்னே நெஞ்சம் மூழ்கிப் போனேன்
       காதலில் தினம் உன்பேரைச் சொல்லி கவிதைகள் ஆயிரம் சொன்னேன்
       (ஏன் இன்னும் மெளனம் நீ பேசவில்லை)
 
சரணம்-2
=======
பெ: பூ சிறு பூ என்னை அள்ளிக் கொள்ளக் கூடாதா உன் கையில்
      தேன் துளி தேன் நான் உன்னை சேரலாகாதா என் கண்ணா
      இரவோ இனிமை நிலவோ பசுமை
      ஆனந்தம் இல்லை நான் தேடி வந்தேன் நீ வரவில்லை நான் பேசவில்லை
      கண் விழித்தால் உன் ஞாபகம் கண் மூடினால் உன் ஞாபகம்
      ஏன் ஏன் நீ வரவில்லை கண்ணா நீ வந்து நீரூற்று என் நெஞ்சிலே
      (ஏன் இன்னும் மெளனம் நீ பேசவில்லை)
 

No comments:

Post a Comment