Showing posts with label VEPPAM. Show all posts
Showing posts with label VEPPAM. Show all posts

Sunday, August 28, 2011

காற்றில் ஈரம் அதை யார் தந்ததோ ...




காற்றில் ஈரம் அதை யார் தந்ததோ 
கால்கள் நடனம் இட யார் சொன்னதோ 
பூமி முடியும் அந்த எல்லை 
வரைப் போவோமா
நேற்று நாளை அது பொய்யானதோ
இன்று மட்டும் இங்கு மெய் ஆனதோ
மேகம் அலையும் அந்த வானம் 
வரைப் போவோமா
இன்றென்ன இத்தனை இன்பம்
இதயக் கூட்டில் நீந்திடுதே 
நடை பாதை பூக்கள் எல்லாம் 
கைகள் நீட்டிடுதே 
நீங்காத புன்னகை ஒன்று 
உதட்டின் மீது பூத்திடுதே 
வாழ்க்கையை பிடிக்கிறதே 

காற்றில் ஈரம் அதை யார் தந்ததோ 
கால்கள் நடனம் இட யார் சொன்னதோ 
பூமி முடியும் அந்த எல்லை 
வரைப் போவோமா
நேற்று நாளை அது பொய்யானதோ
இன்று மட்டும் இங்கு மெய் ஆனதோ
மேகம் அலையும் அந்த வானம் 
வரைப் போவோமா

ஓ... ஒரு நாள் இந்த ஒரு நாள் 
உயிரோடு இருந்தாலும் வாழும் 
பயணம் இந்த பயணம் 
இது தொடர்ந்திட வேண்டும் 
அருகில் உனதருகில் நான் வாழும் 
நிகழ் காலம் போதும் 
நிமிடம் இந்த நிமிடம் 
இது உறைந்திட வேண்டும் 
மௌனத்தில் சில நேரம் 
மயக்கத்தில் சில நேரம் 
தயக்கத்தில் சில நேரம் 
இது என்னவோ புது உறவின்கே 
கண்ணருகில் சில தூரம் 
கை அருகில் சில தூரம் 
வழித் துணையைக் கேட்கிறதே 
வா வா வா

ஓ நம் நெஞ்சில் ஓரம் ஏன் 
இங்கு இதனை ஈரமோ
நம் கண்களில் ஓரம்தான் 
புதுக் கனவுகள் நூறும் 
இது என்ன இது என்ன
இந்த நாள் தான் திருநாளா
இதற்காக இதற்காக 
காத்திருந்தோம் வெகு நாளா

இன்றென்ன இத்தனை இன்பம்
இதயக் கூட்டில் நீந்திடுதே 
நடை பாதை பூக்கள் எல்லாம் 
கைகள் நீட்டிடுதே 
நீங்காத புன்னகை ஒன்று 
உதட்டின் மேலே பூத்திடுதே 
வாழ்க்கையை பிடிக்கிறதே

காற்றில் ஈரம் அதை யார் தந்ததோ 
கால்கள் நடனம் இட யார் சொன்னதோ 
பூமி முடியும் அந்த எல்லை 
வரைப் போவோமா
நேற்று நாளை அது பொய்யானதோ
இன்று மட்டும் இங்கு மெய் ஆனதோ
மேகம் அலையும் அந்த வானம் 
வரைப் போவோமா

பாடியவர்கள்: கார்த்திக், ஸ்ரீசரண்
படம்: வெப்பம்
இசை: ஜேஸ்வா ஸ்ரீதர்
பாடல்:  நா முத்துக்குமார்

Tuesday, August 23, 2011

ஒரு தேவதை வீசிடும் பார்வையிலே...




ஒரு தேவதை வீசிடும் பார்வையிலே
விழுவது ஒரு சுகம்
அவள் தூரத்தில் வருவதை பார்க்கையிலே
கரைவதும் ஒரு சுகம்
என்னோடு புது மாற்றம் தந்தாள்
எங்கெங்கும் உரு மாற்றம் தந்தாள்
என் வாழ்வில் ஒரு ஏற்றம் தந்தாள்
அவள் எனக்கு என்று இந்த மண்ணில் வந்து பிறந்தவளோ
கண் தூங்கும் போதும் காவல் தந்தாள்
அவள் கடவுள் தந்த பரிசாக கையில் கிடைத்தாள்

ஓ ஹோ ஓ ....ஓ ஹோ ஓ ....ஓ ஹோ ஓ ....

ஒரு தேவதை வீசிடும் பார்வையிலே
விழுவது ஒரு சுகம்
அவள் தூரத்தில் வருவதை பார்க்கையிலே
கரைவதும் ஒரு சுகம்

என் வானில் மேகங்கள் சொல்லாமல் தூறுதே
என் காதல் வானிலை சந்தோஷம் தூவுதே
நீ தந்த பார்வை நனைந்தாளே பாவை
அன்பே அன்பே எந்தன் நெஞ்சில்
ஒளி வீசும் காலை
இருள் பூசும் மாலை
உந்தன் முகம் எந்தன் கண்ணில்

மின்சாரம் இல்லா நேரத்தில்
மின்னலாய் வந்து ஒளி தருவாள்
அந்த வெளிச்ச மழையில்
நான் நனைந்திடுவேன்
விரல் தொட்டு விடும் தூரத்தில்
மனம் சுட்டெரிக்கும் பாரத்தில்
புரியாத போதை
இது புரிந்த போதும்
அவள் பக்கம் வர பக்கம் வர
படபடக்கும்

அவள் மாலையில் மலர்ந்திடும் மலர் அல்லவா
வாசனை என் சொந்தம்
அவள் அனைவரும் ரசித்திடும் நதி அல்லவா
அலை மட்டும் என் சொந்தம்

கண்ணாடி அவள் பார்த்ததில்லை
ஏன் என்று நான் கேட்டதில்லை
அவள் அழகை அளக்கும் ஒரு கருவி அல்ல
அவள் கட்டளையை கேட்டு தான்
நான் கட்டுப்பட்டு வாழுவேன்
அறியாத பாதை இது அறிந்த போதும்
அவள் பக்கம் வர பக்கம் வர
படபடக்கும்

ஓ ஹோ ஓ.....ஓ ஹோ ஓ ....ஓ ஹோ ஓ ....

ஒரு தேவதை வீசிடும் பார்வையிலே
விழுவது ஒரு சுகம்
அவள் தூரத்தில் வருவதை பார்க்கையிலே
கரைவதும் ஒரு சுகம்
என்னோடு புது மாற்றம் தந்தாள்
எங்கெங்கும் உரு மாற்றம் தந்தாள்
என் வாழ்வில் ஒரு ஏற்றம் தந்தாள்
அவள் எனக்கு என்று இந்த மண்ணில் வந்து பிறந்தவளோ
கண் தூங்கும் போதும் காவல் தந்தாள்
அவள் கடவுள் தந்த பரிசாக கையில் கிடைத்தாள்

ஒரு தேவதை வீசிடும் பார்வையிலே
விழுவது ஒரு சுகம்
அவள் தூரத்தில் வருவதை பார்க்கையிலே
கரைவதும் ஒரு சுகம்

பாடியவர்:கிளிண்டன், ஸ்வேதா
படம்: வெப்பம்
இசை: ஜேஸ்வா ஸ்ரீதர்
பாடல்:நா முத்துக்குமார்.