Friday, February 26, 2010

அடடா அடடா அடடா என்னை ஏதோ செய்கிறாய் ...





அடடா அடடா அடடா
என்னை ஏதோ செய்கிறாய்
அடடா அடடா அடடா
என் நெஞ்சை கொய்கிறாய்
கனவில் நீயும் வந்தால்
என் உறக்கம் கேட்கிறாய்
எதிரில் நீயும் வந்தால்
என் உயிரை கேட்கிறாய்
அடி உன் முகம் கண்டால்
என் இமை ரெண்டும் கைகள் தட்டுதே
அடடா அடடா அடடா
என்னை ஏதோ செய்கிறாய்
அடடா அடடா அடடா
என் நெஞ்சை கொய்கிறாய்



நீயும் நானும் ஒன்றாய் போகும் போது
நீளும் பாதை இன்னும் வேண்டுமென்று
நெஞ்சம் ஏங்குதடி
வானவில்லாய் நீயும் வந்தபோது
எந்த கறுப்பு வெள்ளை கண்கள் ரெண்டும்
கலராய் மாறுதடி
என் வீட்டு பூவெல்லாம்
உன் வீட்டு திசை பார்க்கும்
உன் வாசம் உன் வாசம் எங்கேன்னு கேட்குதடி
அடடா அடடா அடடா
என்னை ஏதோ செய்கிறாய்
அடடா அடடா அடடா
என் நெஞ்சை கொய்கிறாய்





ஏ வானம் மீது போகும் மேகமெல்லாம்
உனது உருவம் போல வடிவம் காட்ட
கண்கள் ஏங்குதடி
பூவில் ஆடும் பட்டாம் பூச்சி கூட
நீயும் நடந்துக்கொண்டே பறந்து செல்லும்
அழகை ரசிக்குதடி
உன் செய்கை ஒவ்வொன்றும்
என் காதல் அர்த்தங்கள்
நாள்தோறும் நான் சேர்க்கும் ஞாபக சின்னங்கள்
அடடா அடடா அடடா
என்னை ஏதோ செய்கிறாய்
அடடா அடடா அடடா
என் நெஞ்சை கொய்கிறாய்
கனவில் நீயும் வந்தால்
என் உறக்கம் கேட்கிறாய்
எதிரில் நீயும் வந்தால்
என் உயிரை கேட்கிறாய்
அடி உன் முகம் கண்டால்
என் இமை ரெண்டும் கைகள் தட்டுதே
அடடா அடடா அடடா
என்னை ஏதோ செய்கிறாய்
அடடா அடடா அடடா
என் நெஞ்சை கொய்கிறாய்


பாடியவர்: சித்தார்த்
படம்: சந்தோஷ் சுப்ரமணியம்
இசை: தேவிஸ்ரீ பிரசாத்

1 comment: