Monday, March 29, 2010

போறாளே பொன்னுத்தாயி ...



போறாளே பொன்னுத்தாயி 
போகிற போக்கில் மனசத் தொட்டு
தர பாக்கும் கருதப்போல வெட்கப்பட்டு

போறாளே பொன்னுத்தாயி 
புழுதிக் காட்டில் மனச விட்டு
உள்ளூரு பொல்லாப்புக்குக் கட்டுப் பட்டு

வெள்ளாமை நீதான்
வெள்ளாடு நாந்தான்
வெட்கத்த விட்டுத் தள்ளம்மா

வெள்ளாம காட்ட
விட்டுத் தர மாட்டா
பண்பாட கட்டிக்காக்கும்
பட்டிக்காட்டுக் கருத்தம்மா

போறாளே பொன்னுத்தாயி 
புழுதிக் காட்டில் மனச விட்டு
உள்ளூரு பொல்லாப்புக்குக் கட்டுப் பட்டு

படிக்காத புள்ள மனசெல்லாம் வெள்ளை
இவளது நாக்குல போக்குல மனசில கள்ளமில்ல

உன் மேலே கிறுக்கு
உள்ளூர இருக்கு
வாய்விட்டு சொல்லத்தானே 
தோதேயில்ல தோதேயில்லை
வைகைக்கு கடலை சேர 
யோகமில்ல யோகமில்ல

அது சரி வியாழனும் வெள்ளியும் 
இருப்பது தூரமில்ல
போறாளே பொன்னுத்தாயி 
போகிற போக்கில் மனசத் தொட்டு
தர பாக்கும் கருதப்போல வெட்கப்பட்டு

நீ கண்ட வள்ளி சப்பாத்திக் கள்ளி
கள்ளியின் இலையிலும் காயிலும் கனியிலும்
முள்ளிருக்கும்

அடி போடிக் கள்ளி
நீதாண்டி அல்லி
கண்டாங்கி சேலை கட்டும்
கண்ணகியே கண்ணகியே
உன் கொசுவத்தில் உசுர கட்டி
கொல்லுறியே கொல்லுறியே

வர வர பொம்பள பொழப்பையே 
வம்புல மாட்டுறியே
போறாளே பொன்னுத்தாயி 
புழுதிக் காட்டில் மனச விட்டு
உள்ளூரு பொல்லாப்புக்குக் கட்டுப் பட்டு



பாடியவர்கள்: சுஜாதா, உன்னிமேனன்
படம்: கருத்தம்மா
இசை: AR ரஹ்மான்
பாடல்: வைரமுத்து

No comments:

Post a Comment