ஆ : பட்டாம்பூச்சி கூப்பிடும் போது 
    பூவே ஓடாதே
பெ : காதல்தேனை சாப்பிடும் போது 
     பேசக் கூடாதே
ஆ : பட்டாம்பூச்சி கூப்பிடும் போது 
    பூவே ஓடாதே
பெ : காதல்தேனை சாப்பிடும் போது
     பேசக் கூடாதே
ஆ : யானைத் தந்தத்தின் சிலை நீயே 
    ஏறும் தங்கத்தின் விலை நீயே
பெ : காதல் வீசிய வலை நீயே
     என்னைக் கட்டி இழுத்தாயே
ஆ : பட்டாம்பூச்சி கூப்பிடும் போது 
    பூவே ஓடாதே
பெ : காதல்தேனை சாப்பிடும் போது 
     பேசக் கூடாதே
பெ : எதைத்த தருவது தானென்று 
     எதைப் பெறுவது தானென்று
     குறுக்கும் நெடுக்கும் குழந்தை போல 
     இதயம் குதித்தோட
ஆ : தலையசைக்குது உன் கண்கள்
    தவிதவிக்குது என்நெஞ்சம்
    ஒரு தீ போல ஒருத்தி வந்து 
    உயிரைப் பந்தாட
பெ : ஞாபகம் உன் ஞாபகம்
     அது முடியாத முதலாகும்
ஆ : பூமுகம் உன் பூமுகம்
    அது முடியாத முதல் பாகம்
பெ : பெண்கவிதை இவள்தானே 
     உன் இதழால் படிப்பாயோ
     கண்ணிமையால் எனை மூடி 
     காதல் திறப்பாயோ
ஆ : பட்டாம்பூச்சி கூப்பிடும் போது 
     பூவே ஓடாதே
பெ : ஓய் ஓய் காதல்தேனை சாப்பிடும் போது 
     பேசக் கூடாதே
ஆ : அலைவரிசையில் நீ சிரிக்க 
     தொலைத்தொடர்பினில் நான் இருக்க
     உதடும் உதடும் பேசும் போது 
     உலகை மறந்தேனே
பெ : உனதருகினில் நானிருக்க 
     உயிர்க் கொழுந்தினில் பூ முளைக்க
     இரண்டாம் முறையாய் இதயம் துடிக்கப் 
     புதிதாய்ப் பிறந்தேனே
ஆ : மாலையில் பொன் மாலையில் 
    உன் மடி மீது விழுவேனே
பெ : மார்பினில் உன் மார்பினில் 
     நான் மருதாணி மழை தானே
ஆ : வெண்ணிலவோ நெடுந்தூரம் 
    பெண்ணிலவோ தொடுந்தூரம்
    உன்மழையில் நனைந்தாலே 
    காய்ச்சல் பறந்தோடும்
ஆ : பட்டாம்பூச்சி கூப்பிடும் போது 
    பூவே ஓடாதே
பெ : காதல்தேனை சாப்பிடும் போது 
     பேசக் கூடாதே
ஆ : யானைத் தந்தத்தின் சிலை நீயே
    ஏறும் தங்கத்தின் விலை நீயே
பெ : காதல் வீசிய வலை நீயே
     என்னைக் கட்டி இழுத்தாயே
பாடியவர்கள்: கே,கே, ரீட்டா
இசை: வித்யாசாகர்
படம்: காவலன்
பாடல்: கபிலன்
 


 
No comments:
Post a Comment