ஹே ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து வச்சுக்கிட்டா
ரெட்ட கண்ணாலே என்ன தின்னாடா
பச்ச தண்ணி போல் அட சொம்புக்குள்ளே ஊத்தி வச்சு
நித்தம் குடிச்சு என்ன கொன்னாடா
ஏ பொட்ட காட்டுலே ஆலங்கட்டி மழை பெய்ஞ்சு
ஆறொன்னு ஓடுறத பாரு
அட பட்டாம்பூச்சி தான் என் சட்டையில ஒட்டிக்கிச்சு
பட்டாசு போல நான் வெடிச்சேன்
முட்ட கண்ணால என் மூச்செடுத்து போனவதான்
தொட்ட பின்னால ஏதோ ஆனேன்டா
ஏ பவுடர் டப்பா தீர்ந்து போனதே
அந்த கண்ணாடியும் கடுப்பு ஆனதே
நான் குப்பறதான் படுத்து கிடந்தேன்
என்ன குதிர மேல ஏத்திவிட்டாயே
ஒண்ணும் சொல்லாம உசிர தொட்டாயே
மனச இனிக்க வச்ச சீனி மிட்டாயே
ஹே ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து வச்சுக்கிட்டா
ரெட்ட கண்ணாலே என்ன தின்னாடா
பச்ச தண்ணி போல் அட சொம்புக்குள்ளே ஊத்தி வச்சு
நித்தம் குடிச்சு என்ன கொன்னாடா
ஏ கட்ட வண்டி கட்டி வந்துதான்
அவ கண்ணழக பாத்து போங்கடா
அட கட்டு சோறு கட்டி வந்துதான்
அவ கழுத்தழக பாத்து போங்கடா
கத்தாழ பழச்சிவப்பு முத்தாத இளஞ்சிரிப்பு
வத்தாத அவ இடுப்பு நான் கிறுக்கானேன்
ஹே ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து வச்சுக்கிட்டா
ரெட்ட கண்ணாலே என்ன தின்னாடா
பச்ச தண்ணி போல் அட சொம்புக்குள்ளே ஊத்தி வச்சு
நித்தம் குடிச்சு என்ன கொன்னாடா
அட ரேஷன் கார்டில் பேர ஏத்துவேன்
ஒரு நாள் குறிச்சி தட்டு மாத்துவேன்
ஏ ஊருக்கெல்லாம் சேதி சொல்லுவேன்
அவ காதில் மட்டும் மீதி சொல்லுவேன்
பொண்ணு கருப்பட்டி கண்ணு தீப்பெட்டி
மெண்ணு தின்னாலே என்ன ஒருவாட்டி
ஹே ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து வச்சுக்கிட்டா
ரெட்ட கண்ணாலே என்ன தின்னாடா
பச்ச தண்ணி போல் அட சொம்புக்குள்ளே ஊத்தி வச்சு
நித்தம் குடிச்சு என்ன கொன்னாடா
அட பொட்ட காட்டுலே ஆலங்கட்டி மழை பெய்ஞ்சு
ஆறொன்னு ஓடுறத பாரு
அட பட்டாம்பூச்சி தான் என் சட்டையில ஒட்டிக்கிச்சு
பட்டாசு போல நான் வெடிச்சேன்
முட்ட கண்ணால என் மூச்செடுத்து போனவ தான்
தொட்ட பின்னால ஏதோ ஆனேன்டா
பாடியவர்: வேல்முருகன்
படம் : ஆடுகளம்
இசை : G.V. பிரகாஷ்
பாடல்: யேகாதசி
No comments:
Post a Comment