தீ இல்லை புகை இல்லை
ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே
நூல் இல்லை தறி இல்லை
ஒரு காதல் நெய்கிறாய் மனதிலே
பூ இல்லை மடல் இல்லை
புது தேனை பெய்கிறாய் உயிரிலே
என்னை உன்னிடம் இழக்கிறேன்
இருந்தும் இல்லையாய் இருக்கிறேன்
முன்னும் பின்னும் சின்னம் வைப்பேன் சின்ன சின்னதாய்
ஓ ஓ ஓ...ஹோ...ஓ... விலையாய் தந்தேனே என்னை
ஓ ஓ ஓ...ஹோ...ஓ...வாங்கிக் கொண்டேனே உன்னை
ஓ ஓ ஓ...ஹோ...ஓ...ஆடை கொண்டதோ தென்னை
வெகு நாளாய் கேட்டேன்
விழி தூறல் போட்டாய்
உயிர் பயிர் பிழைத்தது உன்னாலே
விலகாத கையை தொட்டு
விழியோர மையை தொட்டு
உயில் ஒன்று எழுதிடு உதட்டாலே
விலக்கிய கனியை விழுங்கியது
விழுங்கிய நெஞ்சம் புழுங்கியது
இது ஒரு சாட்சி போதாதா
கண்கள் மோதாதா காதல் ஒதாதா
தீ இல்லை புகை இல்லை
ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே
நூல் இல்லை தறி இல்லை
ஒரு காதல் நெய்கிறாய் மனதிலே
பூ இல்லை மடல் இல்லை
புது தேனை பெய்கிறாய் உயிரிலே
என்னை உன்னிடம் இழக்கிறேன்
இருந்தும் இல்லையாய் இருக்கிறேன்
முன்னும் பின்னும் சின்னம் வைப்பேன் சின்ன சின்னதாய்
ஓ புனல்மேலே வீற்று
பனி வாடை காற்று
புனைந்தது நமக்கொரு புது பாட்டு
கடற்கரை நாரை கூட்டம்
கரைந்திங்கு ஊரை கூட்டும்
இருவரும் நகர்வலம் வரும் பார்த்து
சிலு சிலு வென்று குளிர் அடிக்க
தொடு தொடு என்று தளிர் துடிக்க
எனக்கொரு பார்வை நீதானே
என்னை எடுப்பாயா உன்னில் ஒளிப்பாயா
தீ இல்லை புகை இல்லை
ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே
நூல் இல்லை தறி இல்லை
ஒரு காதல் நெய்கிறாய் மனதிலே
பூ இல்லை மடல் இல்லை
புது தேனை பெய்கிறாய் உயிரிலே
என்னை உன்னிடம் இழக்கிறேன்
இருந்தும் இல்லையாய் இருக்கிறேன்
முன்னும் பின்னும் சின்னம் வைப்பேன் சின்ன சின்னதாய்
ஓ ஓ ஓ...ஹோ...ஓ... விலையாய் தந்தேனே என்னை
ஓ ஓ ஓ...ஹோ...ஓ...வாங்கிக் கொண்டேனே உன்னை
ஓ ஓ ஓ...ஹோ...ஓ...ஆடை கொண்டதோ தென்னை
பாடியவர்கள்:நரேஷ் ஐயர், மகதி, கோபால் ராவ், முஹேஷ், ரானா ரெட்டி
படம்: எங்கேயும் காதல்
இசை:ஹாரிஸ் ஜெயராஜ்.
பாடல்: வாலி.
No comments:
Post a Comment