Monday, September 29, 2008

vaaranam aayiram - mundhinam paarthaenae

படம்: வாரணம் ஆயிரம்
பாடியவர்கள்: நரேஷ் ஐயர்,  பிரசாந்தினி
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடல்: தாமரை

பல்லவி
========

சூர்யா: Hai Malini .. I am Krishnan..
        நான் இதை  சொல்லியே ஆகணும்.. நீ அவ்வளவு அழகு
        இங்க எவனும் இவ்ளோ அழகா ஒரு ப்ச்..
         இவ்ளோ அழகைப் பாத்திருக்க மாட்டாங்க..
        And I am in love with you...

ஆ: முன் தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே
        சல்லடைக் கண்ணாக நெஞ்சமும் புண்ணானதே
        இத்தனை நாளாக உன்னை நான் பாராமல்
        எங்கு நான் போனேனோ நாட்களும் வீணானதே
        வானத்தில் நீ வெண்ணிலா ஏக்கத்தில் நான் தேய்வதா
        இப்போழ்தே என்னோடு வந்தாலென்ன‌
        ஊர் பார்க்க ஒன்றாக சென்றாலென்ன  (இப்போழ்தே)
       (முன் தினம் பார்த்தேனே..)

சரணம் 1
========

ஆ: காதலே.. சுவாசமே..

ஆ: துலாத் தட்டில் உன்னை வைத்து
        நிகர் செய்ய பொன்னை வைத்தால்
       துலாபாரம் தோற்காதோ பேரழகே
பெ: முகம் பார்த்துப் பேசும் உன்னை
       முதல் காதல் சிந்தும்  கண்ணை
      அணைக்காமல் போவேனோ ஆருயிரே
ஆ: ஓ நிழல் போல விடாமல் உன்னை தொடர்வேனடி
       புகை போல படாமல் பட்டு நகர்வேனடி
       வினா நூறு கனாவும் நூறு விடை சொல்லடி

பெ: முன் தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே..
        சல்லடைக் கண்ணாக நெஞ்சமும் புண்ணானதே
        இத்தனை நாளாக
ஆ: oh my love
பெ: உன்னை நான் பாராமல்
ஆ: yes my love
பெ:  எங்கு நான் போனேனோ நாட்களும் வீணானதே

சரணம் 2
========

பெ: கடல் நீலம் மங்கும் நேரம்
         அலை வந்து தீண்டும் தூரம்
        மனம் சுத்தம் ஆகாதா ஈரத்திலே
ஆ: தலை சாய்க்கத் தோளும் தந்தாய்
       விரல் கோர்த்துப் பக்கம் வந்தாய்
       இதழ் மட்டும் இன்னும் ஏன் தூரத்திலே
பெ: பகல் நேரம் கனாக்கள் கண்டேன் உறங்காமலே
         உயிரெங்கும் உதயம் கண்டேன் நெருங்காமலே
         உனையன்றி எனக்கு ஏது எதிர்காலமே

ஆ: முன் தினம் பார்த்தேனெ பார்த்ததும் தோற்றேனே..

No comments:

Post a Comment