Monday, December 30, 2013

Poomani - Tholmela Tholmela Poomaala Poomaala

படம்: பூமணி
பாடல்:
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா, சுஜாதா


சரணம்
========
பெ: தோள் மேல தோள் மேல பூமால பூமால
     கலந்ததிங்கு யாரால காமன் அவன் பேரால
ஆ: தோள் மேல தோள் மேல பூமாலை பூமாலை
     கலந்ததிங்கு யாரால காமன் அவன் பேரால
பெ: ஓ மைனா மைனா இது உண்மை தானா
     அந்த சொர்க்கம் எல்லாம் உன் கையில் தானா
     ரெக்கை கட்டுதே நெஞ்சமே நெஞ்சமே
ஆ:  தோள் மேல தோள் மேல பூமாலை பூமாலை
     கலந்ததிங்கு யாரால காமன் அவன் பேரால
பெ: தோள்மேல தோள் மேல பூமாலை பூமாலை
     கலந்ததிங்கு யாரால காமன் அவன் பேரால

பல்லவி 1
==========

பெ: செந்தாழம் பூக்களே என் கூந்தல் சூடவா
     சந்தோஷ நாட்களே என் வாசல் தேடிவா
ஆ: சொல்லாத ஆசைகள் என்னென்ன சொல்லவா
     நூறாண்டுக் காதலை ஓராண்டில் வாழவா
பெ: ஆகாய கங்கையே என் தாகம் தீர்க்கவா
     தாயாகி உன்னை நான் தாலாட்டிப் பார்க்கவா
ஆ: நீ அணைக்கும் அன்பிலே அன்பிலே
     நான் கரைந்தேன் உன்னிலே உன்னிலே
பெ: துள்ளுதே துள்ளுதே என் மனம் விண்ணிலே


ஆ: தோள் மேல தோள் மேல பூமால பூமால
     கலந்ததிங்கு யாரால காமன் அவன் பேரால
    ஓ மைனா மைனா இது உண்மை தானா
     அந்த சொர்க்கம் எல்லாம் உன் கையில் தானா
     ரெக்கை கட்டுதே நெஞ்சமே நெஞ்சமே
பெ:
தோள் மேல தோள் மேல பூமால பூமால
     கலந்ததிங்கு யாரால காமன் அவன் பேரால


பல்லவி 2
==========
ஆ: பூவுக்கு வாசனை  யாரிங்கு தந்தது
     நேசங்கள் என்பது நெஞ்சோடு உள்ளது
பெ: என் பெண்மை இன்று தான் பூச்சூடிக் கொண்டது
     என் கோவில் இன்று தான் தீபங்கள் கண்டது
ஆ: உன் நெஞ்சில் வாழவே ஒரு ஜென்மம் வாங்கினேன்
     உன் மூச்சில் தானடி நான் இன்னும் வாழ்கிறேன்
பெ: நான் இருந்தேன் வானிலே மேகமாய்
     ஏன் விழுந்தேன் பூமியில் வேகமாய்
ஆ: வீழ்ந்த்தும் நல்லதே தாகமாய் உள்ளதே

பெ: தோள் மேல தோள் மேல பூமால பூமால
ஆ: கலந்ததிங்கு யாரால காமனவன் பேரால
பெ: ஓ மைனா மைனா இது உண்மை தானா
ஆ: அந்த சொர்க்கம் எல்லாம் உன் கையில் தானா
பெ: ரெக்கை கட்டுதே நெஞ்சமே நெஞ்சமே

ஆ: தோள் மேல தோள் மேல பூமால பூமால
பெ: கலந்ததிங்கு யாரால காமனவன் பேரால

 --- மு. இராகவன் என்ற சரவணன்
    30 திசம்பர் 2013 திங்கள் மாலை 5 49 மணி இந்திய நேரப்படி
     சிபிடி பேலாபூர், நவி மும்பை, மகாராஷ்டிரா, இந்தியா

Friday, November 15, 2013

valmiki-oli-tharum-sooriyanum-nee-illai

படம்: வால்மீகி
பாடியவர்கள்: இளையராஜா, பேலா ஷிண்டே
பாடல் : <<தெரியவில்லை>>
இசை : இளையராஜா


சரணம்
--------------
குழு: மனதில் உறுதி வேண்டும் வாக்கினிலே இனிமை வேண்டும்
            நினைவு நல்லது வேண்டும் நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்

பெ:  ஒளி தரும் சூரியனும் நீ இல்லை
           இரவினில் வான் வரும் நிலவும் இல்லை
           (ஒளி தரும் சூரியனும்..)
          விலகாத இருளினையும் விலக்கி வைக்கும் விளக்கானேன்
          அது போதும் அது போதும் என் விடியலுக்கோர் கிழக்கானாய்

ஆ:   ஒளி தரும் சூரியனும் நீ இல்லை
           இரவினில் வான் வரும் நிலவும் இல்லை
           விலகாத இருளினையும் விலக்கி வைக்கும் விளக்கானேன்
          அது போதும் அது போதும் என் விடியலுக்கோர் கிழக்கானாய்

           ஒளி தரும் சூரியனும் நீ இல்லை

பல்லவி 1
----------------
ஆ: என்னை மாற்ற ஏன் எண்ணினாய்  இங்கு என்னை ஏமாற்றி வாழ்ந்தவன்
         கல்லைக் கூட நீ கனிய வைக்கிறாய் புல்லைப் பூவென மாற்றினாய்
பெ: மாறிப் போகின்ற உலகிலே என்றும் அன்பு மாறாது சொல்லலாம்
         ஒன்றும் இல்லாது ஓய்ந்து நின்றாலும் ஊக்கத்தை அன்பில் ஊட்டலாம்
ஆ: எத்தனை உள்ளம் நோக என்னென்ன செய்தவன்
         சத்தியம் செய்தே சொல்வேன் இன்று தான் மனிதனே
பெ: திருந்திய பின்னே வருந்துவது ஏனோ
         திருந்திய பின்னே வருந்துவது ஏனோ வருவது வசந்தங்களே....


பல்லவி 2
-----------------
பெ: வண்ணப் பூப்பூத்து வாசம் எங்கெங்கும் வந்து சொல்கின்ற நாளிது
         கோயில் மணியோசை தென்றல் காற்றோடு காதில் தேன் பாயும் நாளிது
ஆ:  கொஞ்சும் கிளி போல கோலக்குயில் போல பிஞ்சு மனசாகிப் போகுது
         கங்கை நதி போல பொங்கும் அலை போல உள்ளம் ஒன்றாகிச் சேர்ந்தது
பெ: இன்று போல் என்றும் என்றும் நல்லதே செய்யலாம்
          உள்ளதே போதும் என்று நிம்மதி கொள்ளலாம்
ஆ:  ஒரு வழி அடைத்தால் மறுவழி திறக்கும்
         ஒரு வழி அடைத்தால் மறுவழி திறக்கும் அதிசயம் அதிசயமே


பெ: ஒளி தரும் சூரியனும் நான் இல்லை                  
ஆ:  ஒளி தரும் சூரியனும் நீ இல்லை
பெ: இரவனில் வான் வரும் நிலவும் இல்லை        
ஆ:  இரவினில் வான் வரும் நிலவும் இல்லை
பெ: ஒளி தரும் சூரியனும் நான் இல்லை                    
ஆ:  ஒளி தரும் சூரியனும் நீ இல்லை
பெ: இரவனில் வான் வரும் நிலவும் இல்லை        
ஆ:  இரவினில் வான் வரும் நிலவும் இல்லை
பெ: விலகாத இருளினையும் விலக்கி வைக்கும் விளக்கானேன்
        அது போதும் அது போதும் உன் விடியலுக்கோர் கிழக்கானேன்
ஆ: ஒளி தரும் சூரியனும் நீ இல்லை                          பெ:  நான் இல்லை
ஆ:  இரவினில் வான் வரும் நிலவும் இல்லை      பெ:  நிலவும் இல்லை
ஆ:   விலகாத இருளினையும் விலக்கி வைக்கும் விளக்கானாய்      
பெ:  விளக்கானேன்
ஆ: அது போது அது போதும் என் விடியலுக்கோர் கிழக்கானாய்          
பெ: கிழக்கானேன்
ஆ: ஒளிதரும் சூரியனும் நீ இல்லை


 -- மு. இராகவன் என்ற சரவணன்
    15 நவம்பர் 2013 வெள்ளி இரவு 11 25 மணி (இந்திய நேரப்படி)
     நவி மும்பை | மகாராஷ்டிரா | இந்தியா

Wednesday, November 13, 2013

yamuna-ohoho-ottrai-panithuli

படம்: யமுனா
பாடியவர்கள்: பிரசன்னா, சைந்தவி
பாடல் : வைரமுத்து
இசை : இலக்கியன்


சரணம்
--------------
ஆ:  ஓஹோஹோ ஒற்றைப் பனித்துளி உருண்டோடி உயிரில் விழுந்தது
         ஆஹாஹா அன்பின் கரம்தொட அலைமோதி நெஞ்சம் உடைந்தது
         ஓஹோஹோ ஒற்றைப் பனித்துளி உருண்டோடி உயிரில் விழுந்த்து
பெ:  ஆஹாஹா அன்பின் கரம்தொட அலைமோதி நெஞ்சம் உடைந்தது
          பார்த்த முதல் பார்வை வந்து என் தேகம் எங்கிலும் நனைந்து போகுதே
ஆ:   காற்றில் உன் சுவாசம் வந்து என் காயம் எங்கிலும் மருந்து போடுதே
           புதிய  உலகம் புதிய காற்று
பெ:   காதல் இசையில் கவிதை மீட்டு

ஆ:    தானன தானனனா தானனனன தானானா
            தானன தானனனா தானனனன தானனா

பெ:   ஓஹோஹோ ஒற்றைப் பனித்துளி உருண்டோடி உயிரில் விழுந்தது  


பல்லவி 1
----------------
ஆ:  கூந்தலை அள்ளி அள்ளிக்  குதிரை வால் போட்டுப் போட்டு
          நடந்து நீ வருகையில்  என் மனம் குதிரையாகுதே
பெ:  நெஞ்சிலே ரகசியமுண்டு கண்ணிலே ரகசியமில்லை
          காதலும் கர்ப்பமும் மறைப்பது சாத்தியமில்லை
ஆ:   தானமாய் வருவதை யாரும் திட்டம் போட்டுத் திருடுவதில்லை
           உன்னுயிர் மொத்தம் என்னதடி.
பெ :  சொந்தமாய் உள்ளதை எல்லாம் துறக்கும் போதே சொர்க்கம் கிட்டும்
           கவிதையில் ஞானிகள் சொன்னபடி
ஆ:    உயிர் தொடவா தொடவா
பெ :  இது கன்வா நனவா

ஆ:    தானன தானனனா தானனனன தானானா
            தானன தானனனா தானனனன தானனா
பெ:   ஓஹோஹோ ஒற்றைப் பனித்துளி
            உருண்டோடி உயிரில் விழுந்தது
       

பல்லவி 2
-----------------
ஆ:  காற்றிலே ஆடை சரிந்தால் கவசமாய்ப் புத்தகம் கொண்டாய்
          என்னையே கவசமாய் எப்போது அணியப் போகிறாய்
பெ:  என் மார்பில் உன்னை அணிந்தால் எப்போதும் இறங்கவும் மாட்டாய்
           இதயமே வருடுவாய் இரவோடு திருடப் பார்ப்பாய்
ஆ:  அள்ளியே தருவதினாலே கொள்ளை அழகு குறைவதுமில்லை
          மெளனமே மொழியின் உச்ச நிலை
பெ:  கூந்தலில் ஈரம் சொட்டக் குளித்து வந்த பின்னால் கூட‌
          குறும்புகள் இன்னும் ஓய்வதில்லை
ஆ:   இதில் பெறுதல் சுகமா
பெ:  இல்லை தருதல் சுகமா

ஆ:    தானன தானனனா தானனனன தானானா
            தானன தானனனா தானனனன தானனா
           (தானனா தானனனா...)


 -- மு. இராகவன் என்ற சரவணன்
    13 நவம்பர் 2013 புதன் மாலை 5 10 மணி (இந்திய நேரப்படி)
     நவி மும்பை | மகாராஷ்டிரா | இந்தியா

Monday, November 11, 2013

thalaivaa-yaar-indha-saalai-oram-pookkal-vaithadhu

படம்: தலைவா
பாடியவர்கள்: ஜி.வி.பிரகாஷ், சைந்தவி
பாடல் : நா. முத்துக்குமார்
இசை : ஜி.வி. பிரகாஷ்

சரணம்
--------------
ஆ: யார் இந்த சாலையோரம் பூக்கள் வைத்தது
        காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது
பெ: யார் எந்தன் வார்த்தை மீது மெளனம் வைத்தது
         இன்று பேசாமல் கண்கள் பேசுது
ஆ: நகராமல் இந்த நொடி நீள
        எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே
பெ: குளிராலும் கொஞ்சம் அனலாலும்
         இந்த நெருக்கம் தான் கொல்லுதே
ஆ:  எந்தன் நாளானது இன்று வேறானது
         வண்ணம் நூறானது வானிலே
        (யார் இந்த சாலையோரம்..)

பல்லவி 1
----------------
ஆ: தீரத் தீர ஆசை யாவும் பேசலாம்
        மெல்ல தூரம் விலகிப்  போகும் வரையில் தள்ளி நிற்கலாம்
பெ: என்னை நானும் உன்னை நீயும் தோற்கலாம்
         இங்கு துன்பம் கூட இன்பம் என்று கண்டு கொள்ளலாம்
ஆ:  என்னாகிறேன் இன்று ஏதாகிறேன்
பெ: எதிர் காற்றிலே சாயும் குடையாகிறேன்
ஆ: எந்தன் நெஞ்சானது இன்று பஞ்சானது
         அது பறந்தோடுது வானிலே
பெ: (யார் எந்தன் வார்த்தை மீது....)

பல்லவி 2
-----------------
ஆ: மண்ணில் ஓடும் நதிகள் தோன்றும் மலையிலே
         அது மலையை விட்டு ஓடி வந்து சேரும் கடலிலே
பெ: வைரம் போலப் பெண்ணின் மனது உலகிலே
         அது தோன்றும் வரையில் புதைந்து கிடக்கும் என்றும் மண்ணிலே
ஆ:  கண் ஜாடையில் உன்னை அறிந்தேனடி
பெ:  என் பாதையில் இன்று உன் காலடி
ஆ:  நேற்று நான் பார்த்ததும் இன்று நீ பார்ப்பதும்
          நெஞ்சம் எதிர்பார்ப்பதும் ஏனடி
   
ஆ: யார் இந்த சாலையோரம்..
பெ: யார் எந்தன் வார்த்தை மீது...
ஆ: நகராமல்..
பெ: குளிராலும்..
ஆ: எந்தன் நாளானது இன்று வேறானது
         வண்ணம் நூறானது வானிலே


 -- மு. இராகவன் என்ற சரவணன்
    11 நவம்பர் 2013 திங்கள் இரவு 11 50 மணி (இந்திய நேரப்படி)
     நவி மும்பை | மகாராஷ்டிரா | இந்தியா

Thursday, November 15, 2012

அண்டார்டிக்கா வெண் பனியிலே...


உனைப் போலே ஒரு பெண்ணை
காண்பேனா என்றே வாழ்ந்தேன்
நீ கிடைத்தால்,
என் தேசம் போலே உன்னை நேசிப்பேன்


அண்டார்டிக்கா
வெண் பனியிலே
ஏன் சறுக்குது நெஞ்சம்?

நீ பெங்குவினா?
பெண் டால்ஃபினா?
ஏன் குழம்புது கொஞ்சம்?

ஹே நிஷா….. நிஷா நிஷா
ஓ...நிஷா…. நிஷா நிஷா
அடி பெண்ணே என்
மனது எங்கே
ரேடார் விளக்குமா?
அடி என் காதல்
ஆழம் என்ன?
சோனா அளக்குமா?

அடி பெண்ணே என்
மனது எங்கே
ரேடார் விளக்குமா?
அடி என் காதல்
ஆழம் என்ன?
சோனா அளக்குமா?
ஹே நிஷா….. நிஷா நிஷா
ஓ...நிஷா…. நிஷா நிஷா

அழகளந்திடும் கருவிகள்
செயலிழந்திடும் அவளிடம்
அணியிலக்கணம் அசைவதை பார்த்தேன்!
அவள் புருவத்துக் குவியலில்
மலைச் சரிவுகள் தோற்பதால்
விழும் அருவிகள் அழுவதை பார்த்தேன்!
அவள் மேலே வெயில் வீழ்ந்தால்
நிலவொளியாய் மாறிப் போகும்
அவள் அசைந்தால்,
அந்த அசைவிலும் இசை பிறக்கும்!

அண்டார்டிக்கா
வெண் பனியிலே
ஏன் சறுக்குது நெஞ்சம்?

நீ பெங்குவினா?
பெண் டால்ஃபினா?
ஏன் குழம்புது கொஞ்சம்?


தடதடவென ராணுவம்
புகுந்திடும் ஒரு சாலையாய்
அதிர்வுடன் நுழைந்தாயடி, என்னில்!
இருவிழிகளெனும் குழலிலே
படபடவென வெடிக்கிறாய்
இருதயம் துளைத்தாயடி, கண்ணில்!
உனைப் போலே ஒரு பெண்ணை
காண்பேனா என்றே வாழ்ந்தேன்
நீ கிடைத்தால்,
என் தேசம் போலே உன்னை நேசிப்பேன்

அண்டார்டிக்கா
வெண் பனியிலே
ஏன் சறுக்குது நெஞ்சம்?

நீ பெங்குவினா?
பெண் டால்ஃபினா?
ஏன் குழம்புது கொஞ்சம்?

ஹே நிஷா….. நிஷா நிஷா
ஓ... நிஷா…. நிஷா நிஷா
அடி பெண்ணே என்

மனது எங்கே
ரேடார் விளக்குமா?
அடி என் காதல்
ஆழம் என்ன?
சோனார் அளக்குமா?

அடி பெண்ணே என்
மனது எங்கே
ரேடார் விளக்குமா?
அடி என் காதல்
ஆழம் என்ன?
சோனார் அளக்குமா?

ஓ...ஓ...ஓ...ஓ...

பாடியவர்கள்: விஜய்பிரகாஷ்,க்ரிஷ்,தேவன்,ராஜீவ்
வரிகள்: மதன் கார்க்கி
இசை: ஹாரிஸ்ஜெயராஜ்
படம்: துப்பாக்கி

Tuesday, October 9, 2012

Thaandavam - Uyirin Uyirea


படம்: தாண்டவம்
பாடல்: நா.முத்துக்குமார்
இசை: ஜி.வி.பிரகாஷ் குமார்
பாடியவர்கள்: சைந்தவி, சத்ய பிரகாஷ், ஜி.வி.பிரகாஷ் குமார்

சரணம்
========
உயிரின் உயிரே உனது விழியில்
என் முகம் நான் காண வேண்டும்
உறங்கும் போதும்  உறங்கிடாமல்
கனவிலே நீ தோன்ற வேண்டும்

காதலாகிக் காற்றிலாடும்
ஊஞ்சலாய் நானாகிறேன்
காலம் தாண்டி வாழ வேண்டும்
வேறு என்ன கேட்கிறேன்

(உயிரின் உயிரே உனது விழியில்..)

பல்லவி 1
==========
சாயங்காலம் சாயும் நேரத்தில்
தோழி போல மாறுவேன்
சோர்ந்து நீயும் தூங்கும் நேரத்தில்
தாயைப் போலத் தாங்குவேன்

வேறு பூமி வேறு வானம் தேடியே நாம் போகலாம்
சேர்த்து வைத்த ஆசையாவும் சேர்ந்து நாமங்கு பேசலாம்
அகலாமலே அணுகாமலே இந்த நேசத்தை யார் நெய்தது
அறியாமலே புரியாமலே இரு நெஞ்சுக்குள் மழை தூவுது

(உயிரின் உயிரே உனது விழியில்..)


பல்லவி 2
==========
தண்டவாளம் தள்ளி இருந்தது
தூரம் சென்று சேரத்தான்
மேற்கு வானில் நிலவு எழுவது
என்னுள் உன்னைத் தேடத்தான்

ஐந்து வயதுப் பிள்ளை போலே உன்னை நானும் நினைக்கவா
அங்கும் இங்கும் கன்னம் எங்கும் செல்ல முத்தம் பதிக்கவா
நிகழ்காலமும் எதிர்காலமும்  இந்த அன்பெனும் வரம் போதுமே
இறந்தாலுமே இறக்காமலே இந்த ஞாபகம் என்றும் வாழுமே

(உயிரின் உயிரே உனது விழியில்..)


 -- மு. இராகவன் என்ற சரவணன்
     29 செப்டம்பர் 2012 சனிக்கிழமை பிற்பகல் 3 45 மணி இந்திய நேரப்படி

Monday, December 26, 2011

ஏனோ தன்னாலே உன் மேலே காதல் கொண்டேனே...



ஏனோ தன்னாலே உன் மேலே காதல் கொண்டேனே
ஏதோ உன்னாலே என் வாழ்வில் அர்த்தம் கண்டேனே

அஸ்க் அஸ்க் அஸ்க் அஸ்க் அஸ்கு
அஸ்க் அஸ்க் அஸ்க் அஸ்க் அஸ்கு

அஸ்க் லஸ்கா ஏமோ ஏமோ -
அஸ்த் அஸ்த் லைபே
அஹாவா போலிங்கோ சிந்தா சிந்தா
இஷ்க் இஷ்க் மைலே - லவ்
இஷ்ட பிரேம பியாரோ பியாரோ 
ஒரு காதல் உந்தன் மேலே

அஸ்க் அஸ்க் அஸ்க் அஸ்க் அஸ்கு



அத்தனை மொழியிலும்
வார்த்தை ஒவ்வொன்று கொய்தேன்
மொத்தமாய் கோர்த்துதான்
காதல் செண்டொன்று செய்தேன்.
உன்னிடம் நீட்டினேன்
காதலை காட்டினேன்

ஏனோ தன்னாலே உன் மேலே
காதல் கொண்டேனே
ஏதோ உன்னாலே என் வாழ்வில்
அர்த்தம் கண்டேனே

அஸ்க் லஸ்கா ஏமோ ஏமோ - 
அஸ்த் அஸ்த் லைபே
அஹாவா போலிங்கோ சிந்தா சிந்தா
இஷ்க் இஷ்க் மைலே லவ்
இஷ்ட பிரேம பியாரோ பியாரோ 
ஒரு காதல் உந்தன் மேலே


ப்ளுட்டோவில் உனை நான் கூடேற்றுவேன்
விண்மீன்கள் பொறுக்கி சூடேற்றுவேன்
முக்கோணங்கள் படிப்பேன்
உன் மூக்கின் மேலே
விட்டம் மட்டம் படிப்பேன்
உன் நெஞ்சின் மேலே
மெல்லிடையோடு வளைகோடு நான் ஆய்கிறேன் ஒ.. ஓ...

ப்ளாட்டோவின் மகனாய் உன் வேடமா
ஆராய்ச்சி நடத்த நான் கூடமா
பாழும் நோயில் விழுந்தாய்
உன் கண்ணில் கண்டேன்
நாளும் உண்ணும் மருந்தாய்
என் முத்தம் தந்தேன்
உன் நெஞ்சில் நாடிமானி வைக்க
காதல் காதல் என்றே கேட்க
அஸ்க் லஸ்கா ஏமோ ஏமோ - ஐ
அஸ்த் அஸ்த் லைபே
அஹாவா போலிங்கோ சிந்தா சிந்தா
இஷ்க் இஷ்க் மைலே

லவ் இஷ்ட பிரேம பியாரோ பியாரோ 
ஒரு காதல் உந்தன் மேலே


தே ஜா வூ கனவில் தீ மூட்டினாய்
ராஜா என் மனதை ஏன் வாட்டினாய்
கப்பம் கேட்டு மிரட்டி நீ
வெப்பம் கொண்டாய்
ரத்தம் மொத்தம் கொதிக்க என்
பக்கம் வந்தாய்
வெண்ணிலவாக இதமாக குளிரூட்டவா

கண்ணாடி நிலவாய் கண் கூசினாய்
வெண்வண்ண நிழலை மண் வீசினாய்
புல்லில் பூத்த பனி நீ
ஒரு கள்ளம் இல்லை
வைரஸ் இல்லா கணிணி உன்
உள்ளம் வெள்ளை
நீ கொல்லை மல்லி முல்லை போலே
பிள்ளை மெல்லும் சொல்லைப் போலே

அஸ்க் லஸ்கா ஏமோ ஏமோ

அஸ்க் லஸ்கா ஏமோ ஏமோ - 
அஸ்த் அஸ்த் லைபே


அஹாவா போலிங்கோ சிந்தா சிந்தா
இஷ்க் இஷ்க் மைலே 

லவ் இஷ்ட பிரேம பியாரோ பியாரோ 
ஒரு காதல் உந்தன் மேலே


ஓ...அத்தனை மொழியிலும்
வார்த்தை ஒவ்வொன்று கொய்தேன்

மொத்தமாய் கோர்த்துதான்
காதல் செண்டொன்று செய்தேன்
உன்னிடம் நீட்டினேன்
காதலை காட்டினேன்

ஏனோ தன்னாலே உன் மேலே
காதல் கொண்டேனே
ஏதோ உன்னாலே என் வாழ்வில்
அர்த்தம் கண்டேனே


பாடியவர்கள்: விஜய் பிரகாஷ், சின்மயி, சுவி
படம்: நண்பன்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடல்: கார்க்கி


காதல் வார்த்தைகள் - மொழி
அஸ்க் - Ask - Turkish
லஸ்கா - Laska - Slovak
Amour - French/Spanish
ஐ - Ai - Chinese
அஸ்த் - Ast - Icelandic
லைபே - Liebe - German
அஹாவா - Ahava - Hebrew
போலிங்கோ - Bolingo - Lin gala
சிந்தா - Cinta - Malay
இஷ்க் - Ishq - Arabic
மைலே - Meile - Lithuanian
லவ் - Love - English
இஸ்டம் - Ishtam - Telugu
ப்ரேம - Premam - Malayalam
பியாரோ- Pyaar - Hindi
காதல் - Kaathal - Tamil

நாடிமானி - Stethoscope