Showing posts with label வைரமுத்து. Show all posts
Showing posts with label வைரமுத்து. Show all posts

Wednesday, November 13, 2013

yamuna-ohoho-ottrai-panithuli

படம்: யமுனா
பாடியவர்கள்: பிரசன்னா, சைந்தவி
பாடல் : வைரமுத்து
இசை : இலக்கியன்


சரணம்
--------------
ஆ:  ஓஹோஹோ ஒற்றைப் பனித்துளி உருண்டோடி உயிரில் விழுந்தது
         ஆஹாஹா அன்பின் கரம்தொட அலைமோதி நெஞ்சம் உடைந்தது
         ஓஹோஹோ ஒற்றைப் பனித்துளி உருண்டோடி உயிரில் விழுந்த்து
பெ:  ஆஹாஹா அன்பின் கரம்தொட அலைமோதி நெஞ்சம் உடைந்தது
          பார்த்த முதல் பார்வை வந்து என் தேகம் எங்கிலும் நனைந்து போகுதே
ஆ:   காற்றில் உன் சுவாசம் வந்து என் காயம் எங்கிலும் மருந்து போடுதே
           புதிய  உலகம் புதிய காற்று
பெ:   காதல் இசையில் கவிதை மீட்டு

ஆ:    தானன தானனனா தானனனன தானானா
            தானன தானனனா தானனனன தானனா

பெ:   ஓஹோஹோ ஒற்றைப் பனித்துளி உருண்டோடி உயிரில் விழுந்தது  


பல்லவி 1
----------------
ஆ:  கூந்தலை அள்ளி அள்ளிக்  குதிரை வால் போட்டுப் போட்டு
          நடந்து நீ வருகையில்  என் மனம் குதிரையாகுதே
பெ:  நெஞ்சிலே ரகசியமுண்டு கண்ணிலே ரகசியமில்லை
          காதலும் கர்ப்பமும் மறைப்பது சாத்தியமில்லை
ஆ:   தானமாய் வருவதை யாரும் திட்டம் போட்டுத் திருடுவதில்லை
           உன்னுயிர் மொத்தம் என்னதடி.
பெ :  சொந்தமாய் உள்ளதை எல்லாம் துறக்கும் போதே சொர்க்கம் கிட்டும்
           கவிதையில் ஞானிகள் சொன்னபடி
ஆ:    உயிர் தொடவா தொடவா
பெ :  இது கன்வா நனவா

ஆ:    தானன தானனனா தானனனன தானானா
            தானன தானனனா தானனனன தானனா
பெ:   ஓஹோஹோ ஒற்றைப் பனித்துளி
            உருண்டோடி உயிரில் விழுந்தது
       

பல்லவி 2
-----------------
ஆ:  காற்றிலே ஆடை சரிந்தால் கவசமாய்ப் புத்தகம் கொண்டாய்
          என்னையே கவசமாய் எப்போது அணியப் போகிறாய்
பெ:  என் மார்பில் உன்னை அணிந்தால் எப்போதும் இறங்கவும் மாட்டாய்
           இதயமே வருடுவாய் இரவோடு திருடப் பார்ப்பாய்
ஆ:  அள்ளியே தருவதினாலே கொள்ளை அழகு குறைவதுமில்லை
          மெளனமே மொழியின் உச்ச நிலை
பெ:  கூந்தலில் ஈரம் சொட்டக் குளித்து வந்த பின்னால் கூட‌
          குறும்புகள் இன்னும் ஓய்வதில்லை
ஆ:   இதில் பெறுதல் சுகமா
பெ:  இல்லை தருதல் சுகமா

ஆ:    தானன தானனனா தானனனன தானானா
            தானன தானனனா தானனனன தானனா
           (தானனா தானனனா...)


 -- மு. இராகவன் என்ற சரவணன்
    13 நவம்பர் 2013 புதன் மாலை 5 10 மணி (இந்திய நேரப்படி)
     நவி மும்பை | மகாராஷ்டிரா | இந்தியா

Thursday, December 23, 2010

thenmerku paruvakkaattru chinaan chinnan kaattula

படம்: தென்மேற்குப் பருவக்காற்று

பாடல்: வைரமுத்து

பாடியவர்: சங்கர் மஹாதேவன்

இசை: என். ஆர். ரகுநாதன்

பல்லவி

=======

சின்னாஞ் சின்னாங் காட்டுல என்

குன்னாங் குருவி சிக்குமா

வண்ணாங் கரட்டில் பார்த்தது என்

வழியில் வந்து நிக்குமா

மூஞ்சி மூஞ்சி தெரிஞ்சது அட

முழுசா யாரு பார்த்தது

கள்ள நாட்டுச் சிறுக்கி தான் அவ

கண்ணைக் கண்டதும் வேர்த்தது

பேரைக் கேட்க நெனச்சேன் என்

புத்தி பெற‌ண்டு போச்சு

ஊரக் கேக்க நெனச்சேன் என்

உசுரு வத்திப் போச்சு

நீ பகையாளி அம்சமோ இல்லை

பங்காளி வம்சமோ

குத்தும் பாம்பாக‌ ஒளியாதே வாடி

(சின்னாஞ் சின்னாங் காட்டுல)

சரணம் 1

========

நீ வீதி தாண்டிப் போனாக் கூட

வேர்வையில் க‌ண்டு பிடிப்பேன்

நீ ப‌ர்தா போட்டுப் போனால் கூட‌

பார்வையில் க‌ண்டு பிடிப்பேன்

வ‌ற‌ட்டி த‌ட்டிய‌ த‌ட‌த்தைப் பார்த்தே

வ‌ய‌சைக் க‌ண்டு பிடிப்பேன்


ஒரு வ‌க்கைப் ப‌ட‌ப்பில் ஒளிஞ்சாக் கூட‌

வைர‌த்தைக் க‌ண்டு பிடிப்பேன்

அழ‌கில் க‌லைவாணி ஒரு அடையாள‌ம் தெரிய‌லையே

ம‌னசக்‌ க‌ள‌வாணி ஒரு துப்பேதும் தொல‌ங்க‌லையே

ஆண்டிப்ப‌ட்டிக் க‌ண‌வாய் அட‌ அங்க‌யும் பாத்தேன் இல்லை

தாண்டிக் குடிக்கி மேல‌ நான் தாண்டிப் பாத்தும் இல்லை

சரணம் 2

=========

காடு தின்னும் ந‌ரியோ முத‌லில்

க‌ழுத்தைத் தானே க‌வ்வும்

ஆவி தின்னும் அழ‌கு முத‌லில்

க‌ண்ணைத் தானே க‌வ்வும்

ப‌ட்டாம்பூச்சி அடிக்கும் ரெண்டு

க‌ண்ணு எப்ப‌டி ம‌ற‌க்கும்

உன்னை நொட்டாங்கையில் தொட்டாக் கூட‌

எட்டாம் நாளும் ம‌ண‌க்கும்

ர‌தியே எங்க‌ தொலைஞ்ச‌ நெஞ்சு ர‌வைக்கெல்லாம் வாடுத‌டி

கிளியே எங்க ப‌ற‌ந்த‌ என் கிடையாடும் தேடுத‌டி

தேனிச் சில்லா பூரா ஒனைத் தேடிப் பாப்பேன் வ‌ஞ்சி

உன் குடும்பி சிக்கின‌ பின்னே நான் குடிப்ப‌து தானே க‌ஞ்சி

(சின்னாஞ் சின்னாங் காட்டுல‌..)

=========================

மு இராக‌வ‌ன் என்ற‌ ச‌ர‌வ‌ண‌ன்

04 ந‌வ‌ம்ப‌ர் 2010 வியாழ‌ன் 6 48 மாலை இந்திய‌ நேர‌ப்ப‌டி

http://thiraippadap-paadal-varigal.blogspot.com

Friday, August 29, 2008

Sangamam - Mazhai Thuli Mazhai Thuli

படம்: சங்கமம்
பாடல்: வைரமுத்து
பாடியவர்கள்:  ஹரிஹரன், எம். எஸ். விஸ்வநாதன்
இசை: ஏ. ஆர். ரஹ்மான்

பல்லவி
=======

ஆ: ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
       மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்
       உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்
      உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம்
      (மழைத்துளி மழைத்துளி..)
      ஆலால கண்டா ஆடலுக்குத் தகப்பா வணக்கமுங்க‌
       என்ன ஆடாம ஆட்டி வைச்ச வணக்கமுங்க‌
       என் காலுக்கு சலங்கையிட்ட உன் காலடிக்கு முதல் வணக்கம்
       என் கால் நடமாடுமையா உம்ம கட்டளைகள் வெல்லும் வரைக்கும்
       (என் காலுக்கு சலங்கையிட்ட)
      நீ உண்டு உண்டு என்றபோதும் அட இல்லை இல்லை என்றபோதும்
     சபை ஆடிய பாதமய்யா அது நிக்காது ஒருபோதும்

       (ஆலால கண்டா ஆடலுக்குத் தகப்பா)

      (மழைத்துளி மழைத்துளி...)

சரணம் 1
========

ஆ: தண்ணியில மீனழுதா கரைக்கொரு தகவலும் வருவதில்லை
       எனக்குள்ள நானழுதா துடைக்கவே எனக்கொரு நாதியில்ல‌
       என் கண்ணீ் ஒவ்வொரு சொட்டும் வைரம் வைரமாகுமே
       சபதம் சபதம் என்றே சலங்கை பாடுமே
        ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
      மனமே மனமே சபதம் வெல்லும் மட்டும் சாயாதிரு
     விழியே விழியே இமையே தீயும் போதும் கலங்காதிரு
     கங்கை நதி அத்தனையும் கடலில் சங்கமம்
     நட்சத்திரம் அத்தனையும் பகலில் சங்கமம்
     கலைகளின் வெகுமதி உன்னிடத்தில் சங்கமம் சங்கமம்

     (மழைத்துளி மழைத்துளி...)

   (ஆலால கண்டா ஆடலுக்குத் தகப்பா)


சரணம் 2
========

(எம். எஸ். விஸ்வநாதன்)
ஆ:  தந்தான தந்தானனா..
        மழைக்காகத் தான் மேகம்  அட கலைக்காகத் தான் நீயும்
         உயிர்  கலந்தாடுவோம் நாளும் மகனே வா
         நீ சொந்தக் காலிலே நில்லு தலை சுற்றும் பூமியை வெல்லு
        இது அப்பன் சொல்லிய சொல்லு மகனே வா மகனே வா
         ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான்
         தன் கண்ணீரை மூடிக் கொண்டு இன்பம் கொடுப்பான்

        புலிகள் அழுவது ஏது  அட பறவையும் அழ அறியாது
        போர்க்களம் நீ புகும்போது முள் தைப்பது கால் அறியாது

         மகனே மகனே காற்றுக்கு ஓய்வென்பது ஏது அட ஏது
         கலைக்கொரு தோல்வி கிடையாது கிடையாது

ஹரி: ஆலால கண்டா ஆடலுக்குத் தகப்பா வணக்கமுங்க‌
விஸ்: என்னை ஆடாம ஆட்டி வெச்ச வணக்கமுங்க‌
ஹரி: என் காலுக்குச் சலங்கையிட்ட உன் காலடிக்கு முதல்வணக்கம்
விஸ்: என் கால் நடமாடுமையா நம்ம கட்டளைகள் வெல்லும்வரைக்கும்
ஹரி: நீ உண்டு உண்டு என்ற போதும்
விஸ்: நீ உண்டு உண்டு என்ற போதும் அட இல்லை இல்லை என்ற போதும்
              சபை ஆடிய பாதமையா அது நிக்காது ஒருபோதும்

ஹரி: மழைத்துளி மழைத்துளி...

Friday, August 22, 2008

Villan - thappu thandaa thappu thandaa

படம்: வில்லன்
பாடல்: வைரமுத்து
பாடியவர்: சங்கர் மஹாதேவன், சுஜாதா
இசை: வித்யாசாகர்

பல்லவி
=======


பெ: தப்புத் தண்டா தப்புத் தண்டா தலைவா நீ செய்யவா
வெயில் படா இடங்களை விளையாடித் தொடவா
ஆ: மன்மதன் அம்புகள் பாய்ந்திடும் வேளையில்
புண்படும் அல்லவா உன் மார்பிலே ஒளியவா
குழு: உய் உய் உய் உய் உய் உய் உய் உய்
உய் உய் உய் உய் உய் உய் உய் உய்
ஆ: தப்புத் தண்டா தப்புத் தண்டா தலைவி நான் செய்யவா
பெ: வெயில் படா இடங்களை விளையாடித் தொடவா

சரணம் ‍1
=======


பெ: களவு கொண்டோடிய கண்களைத் தூக்கத்தை
என்னிடம் திருப்பிக் கொடு
என் உடல் கொஞ்சம் சாயட்டும் உயிர் கொஞ்சம் தூங்கட்டும்
ஒத்தடம் தந்து விடு
ஆ: ஓ ஆயிரம் சேவைகள் கைவசம் உள்ளது அனுமதி தந்து விடு
ஆடையும் அகிம்சையும் ஓரத்தில் தூங்கட்டும் வன்முறை முத்தம் கொடு
பெ: இடியோ மழையோ அது அறையில் இருக்கட்டுமே
இரவோ பகலோ அது வெளியில் இருக்கட்டுமே
ஆ: நடந்து வரும் சித்திரமே நனைய விடும் சொப்பனமே
சுட்டு விரல் தொட்டவுடன் தேன் வடியும் பூவே
யாரிதழில் சுவை அதிகம் பார்ப்போம்

குழு: உய் உய் உய் உய் உய் உய் உய் உய்
உய் உய் உய் உய் உய் உய் உய் உய்

பெ: தப்புத் தண்டா தப்புத் தண்டா தலைவா நீ செய்யவா
ஆ: வெயில் படா இடங்களை விளையாடித் தொடவா

சரணம் 2
=======


ஆ: தினம் தினம் ஓரிடம் உதிக்கிற போதும் சூரியன் புதியதடி
தினம் தினம் ஓரிடம் சேர்கிற போதிலும் சுகவகை புதியதடி
பெ: இருபது வருடங்கள் இந்த சுகம் போதுமென்று சாயுது இளையகொடி
இருபது நிமிடத்தில் இன்னும் கொஞ்சமென்று ஏங்குது பழையபடி
ஆ: ஆடை சரிந்தால் உன் அவசியம் பார்த்து வைப்பேன்
ஜாடை புரிந்தால் உன் சங்கடம் தீர்த்து வைப்பேன்
பெ: மார்பழகு இந்திரனே மஞ்சள் நிற மன்னவனே
உன் பெயரைச் சொன்னவுடன் பூத்துவிட்டேன் நானே
ஓரிரவில் ஏழ்பிறவி வாழ்வேன்

குழு: உய் உய் உய் உய் உய் உய் உய் உய்
உய் உய் உய் உய் உய் உய் உய் உய்

பெ: தப்புத் தண்டா தப்புத் தண்டா தலைவா நீ செய்யவா
ஆ: வெயில் படா இடங்களை விளையாடித் தொடவா
பெ: மன்மதன் அம்புகள் பாய்ந்திடும் வேளையில்
ஆ: புண்படும் அல்லவா உன் மார்பிலே ஒளியவா

Wednesday, September 12, 2007

Roja - Pudhu Vellai Mazhai

படம்: ரோஜா
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
பாடல்: வைரமுத்து
பாடியவர்கள்: உன்னிமேனன், சுஜாதா

பல்லவி
======

பெ: புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூட குளிர்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது
ஆ: புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூட குளிர்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது
பெ: நதி நீர் நீயானால் கரை நானே
சிறு பறவை நீயானால உன் வானம் நானே
ஆ: புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
பெ: இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது

சரணம் 1
=======

ஆ: பெண் இல்லாத ஊரிலே அடி ஆண் பூக்கேட்பதில்லை
பெ: பெண் இல்லாத ஊரிலே கொடி தான் பூப்பூப்பதில்லை
ஆ: உன் புடவை முந்தானை சாய்ந்ததில் இந்த பூமி பூப்பூத்தது
பெ: இது கம்பன் பாடாத சிந்தனை உந்தன் காதோடு யார்சொன்னது

ஆ: புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
பெ: இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
ஆ: இங்கு சொல்லாத இடம் கூட குளிர்கின்றது
பெ: மனம் சூடான இடம் தேடி அலைகின்றது
ஆ: புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
பெ: இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது

ச‌ரணம் 2
========

பெ: நீ அணைக்கின்ற வேளையில் உயிர்ப்பூ திடுக்கென்று மலரும்
ஆ: நீ வெடுக்கென்று ஓடினால் உயிர்ப்பூ சருகாக உலரும்
பெ: இரு கைகள் தீண்டாத பெண்மையை உன் கண்கள் பந்தாடுதோ
ஆ: மலர் மஞ்சம் சேராத பெண்ணிலா எந்தன் மார்போடு வந்தாடுதோ

பெ: புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
ஆ: இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
பெ: இங்கு சொல்லாத இடம் கூட குளிர்கின்றது
ஆ: மனம் சூடான இடம் தேடி அலைகின்றது
பெ: நதி நீர் நீயானால் கரை நானே
சிறு பறவை நீயானால் உன் வானம் நானே

ஆ: புது வெள்ளை மழை பெ: இங்கு பொழிகின்றது
ஆ: இந்தக் கொள்ளை நிலா பெ: உடல் நனைகின்றது

ஆ: புது வெள்ளை மழை பெ: இங்கு பொழிகின்றது
ஆ: இந்தக் கொள்ளை நிலா பெ: உடல் நனைகின்றது

Thursday, August 16, 2007

Indian - Kappaleari Poyaachu

படம்: இந்தியன்
பாடல்: வைரமுத்து
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்பிரமணியம், பி.சுசீலா
இசை: ஏ.ஆர். ரஹ்மான்
 
பல்லவி
======
ஆ: கப்பலேறிப் போயாச்சு சுத்தமான ஊராச்சு கண்ணம்மா
      நட்டநடு ராவாச்சு நட்டவிதை பூவாச்சு பொன்னம்மா
      விடியும் வரையில் போராடினோம் உதிரம் நதியாய் நீராடினோம்
      வைக்கல் எல்லாம் வாளாச்சு துக்கம் எல்லாம் தூளாச்சு கண்ணம்மா
      கண்ணம்மா.... நம்ம வாசல் தேடி சாரல் வரும் 
      மெதுவானம் தூவும் தூறல் வரும்
      வாழ்வில் சூழ்ந்த சோகம் யாவும் இப்ப (கப்பலேறிப் போயாச்சு)
 
சரணம் - 1
==========
 
பெ: வண்ணமான் வஞ்சிமான் நீர்க்கோலம் கண்களால் கன்னத்தில் போட
      இன்னுமா இன்னுமா போர்க்கோலம் இங்குநீ அங்குநான் போராட
      உனைக் கேட்டா என் நெஞ்சை அள்ளிக் கொடுத்தேன்
      தினம் நான் தான் என் அன்பே முள்ளில் படுத்தேன்
      நானோர் தீவாய் ஆனேன் வாவா அம்மம்மா நாளெல்லாம் 
      கானல் நீரைக் குடித்தேன்
 
ஆ: இப்ப (கப்பலேறிப் போயாச்சு)
 
சரணம் - 2
==========
ஆ: லாலா லாலா லாலலலலா லாலாலாலா லாலா லாலலலலா
      அன்னமே அன்னமே நான் சொல்லி வந்ததா தென்றலும் நேற்று
      உன்னையே உன்னையே நான் எண்ணி வெந்ததைச் சொன்னதா பூங்காற்று
      உந்தன் காலில் மெட்டி போல் கூட நடப்பேன்
      உந்தன் கண்ணுக்கு கண்ணீர் போல் காவல் இருப்பேன்
      மாலை சூடி தோளில் ஆடி கைதொட்டு மெய்தொட்டு 
      உன்னில் என்னைக் கரைப்பேன்
      இப்ப (கப்பலேறிப் போயாச்சு)

Monday, April 16, 2007

Mozhi - Peasaa Madanthaiyae

படம்: மொழி
பாடியவர்: யேசுதாஸ்
இசை: வித்யாசாகர்
பாடல்: வைரமுத்து

பல்லவி
======

பேசா மடந்தையே விழிபேசும் சித்திரமே
சேலைக் குழந்தையே என் செல்லக் கலவரமே
இதயம் என்னும் பூப்பறித்தேன் நரம்புகொண்டு சரம்தொடுத்தேன்
கையில் கொடுத்தேன் கண்ணே நீ காலில் மிதித்தாய் பெண்ணே (பேசா மடந்தையே)

சரணம்-1
========

ஏழுநிறங்களை எண்ணிமுடிக்கும் முன் வானவில் கரைந்தது பாதியிலே
மறுபடி தோன்றுமா பார்வையிலே
பெண்ணின் மனதினைக் கண்டுதெளியுமுன் வாழ்க்கை முடிந்தது குழப்பத்திலே
வானம் நடுங்குது மயக்கத்திலே
காதலைச் சொல்லிக் கரம்குவித்தேன் கற்புக்குப்பழி என்று கலங்குகிறாய்
பூஜைக்கு உனக்குப் பூப்பறித்தேன் பூக்களின் கொலை என்று நடுங்குகிறாய்
வார்த்தைகளால் காதலித்தேன் ஜாடைகளால் சாகடித்தாய்
மழைதான் கேட்டேன் பெண்ணே இடிமின்னல் தந்தாய் கண்ணே (பேசா மடந்தையே)

சரணம்-2
========

மூங்கில்காட்டிலே தீயும் அழகுதான் ஆனால் அதைநான் ரசிக்கவில்லல
அய்யோ இதயம் பொறுக்கவில்லை
கோபம் மூள்கையில் நீயும் அழகுதான் ஆனால் அதைநான் சுகிக்கவில்லை
சகியே என்மனம் சகிக்கவில்லை
உன்சினம் கண்டு என் இதயம் உடம்புக்கு வெளியே துடிக்குதடி
உன்மனம் இரண்டாய் உடைந்ததென்று என்மனம் நான்காய் உடைந்ததடி
விதை உடைந்தால் செடிமுளைக்கும் மனம் உடைந்தால் புல்முளைக்கும்
தண்டனை என்பது எளிது உன் மெளனம் வாளினும் கொடிது (பேசா மடந்தையே)

Thursday, April 12, 2007

Anbe Sivam - Yaar Yaar Sivam


படம்          :  அன்பே சிவம்
பாடல்        : வைரமுத்து
பாடியவர்  : கமல்ஹாசன்
இசை         : வித்யாசாகர்
 
பல்லவி
========
ஆ: யார் யார் சிவம் நீ நான் சிவம்
      வாழ்வே தவம் அன்பே சிவம்
      ஆத்திகம் பேசும் அடியார்க்கெல்லாம் சிவமே அன்பாகும்
      நாத்திகம் பேசும் நல்லவருக்கோ அன்பே சிவமாகும்
குழு: அன்பே சிவம் அன்பே சிவம் என்போம் 
        அன்பே சிவம் அன்பே சிவம் என்போம் (அன்பே சிவம்)
ஆ: யார் யார் சிவம் நீ நான் சிவம்
 
 
சரணம் -1
==========
ஆ: யார் யார் சிவம் நீ நான் சிவம்
      வாழ்வே தவம் அன்பே சிவம்
      இதயம் என்பது சதைதான் என்றால் எரிதழல் தின்றுவிடும்
      அன்பின் கருவி இதயம் என்றால் சாவை வென்றுவிடும்
குழு: அன்பே சிவம் அன்பே சிவம் என்போம்
       அன்பே சிவம் அன்பே சிவம் என்போம் (அன்பே சிவம்)
 
 
சரணம் -2
==========
ஆ:  யார் யார் சிவம் நீ நான் சிவம்
      அன்பின் பாதை சேர்ந்தவருக்கு முடிவே இல்லையடா
      மனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளமடா
குழு: அன்பே சிவம் அன்பே சிவம் என்போம் 
       அன்பே சிவம் அன்பே சிவம் என்போம் (அன்பே சிவம்)

Monday, May 22, 2006

Kannaththil Muthamittaal - VellaiPookkal Ulagam Engum

படம் கன்னத்தில் முத்தமிட்டால்
பாடல் வைரமுத்து
பாடியவர் ஏ.ஆர். ரஹ்மான்
இசை ஏ.ஆர். ரஹ்மான்

பல்லவி
======
வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே
விடியும் பூமி அமைதிக்காக விடிகவே
மண்ணில் மஞ்சள் வெளிச்சம் விழுகவே
மலரே சோம்பல் முறித்து எழுகவே
குழந்தை விழிக்கட்டுமே தாயின் கதகதப்பில்
உலகம் விடியட்டுமே பிள்ளையின் சிறுமுதல் சிரிப்பில்
(வெள்ளைப் பூக்கள்)

பல்லவி - 1
==========
காற்றின் பேரசைவும் மழை பாடும் பாடல்களும்
ஒரு மெளனம் போல் இன்பம் தருமோ ஓஓஓஓஒ
கோடி கீர்த்தனமும் கவி கோர்த்த வார்த்தைகளும்
துளி கண்ணீர் போல் அர்த்தம் தருமோ ஓஓ
ஆ ஹா ஹா ஹா
(வெள்ளைப் பூக்கள்..)


பல்லவி - 2
==========
எங்கு சிறு குழந்தை தன் கைகள் நீட்டிடுமோ
அங்கு தோன்றாயோ கொள்ளை நிலவே
எங்கு மனித இனம் போர் ஓய்ந்து சாய்ந்திடுமோ
அங்கு கூவாயோ வெள்ளைக் குயிலே
(வெள்ளைப் பூக்கள்)

Saturday, May 20, 2006

Thambi - Sudum Nilavu

படம் : தம்பி
பாடல்: வைரமுத்து
பாடியவர்: உன்னிகிருஷ்ணன், ஹரிணி
இசை: வித்யாசாகர்

பல்லவி
-----------
பெ: அ அ ஆ அ அ ஆஆஆ
ஆ: அ அ ஆ அ அ ஆ
ஆ: சுடும் நிலவு சுடாத சூரியன்
ஓடும் நிமிஷம் உறையும் வருஷம்
எல்லாம் எல்லாம் எல்லாம் வேண்டுமா (எல்லாம்)
பெ: காதலித்துப் பார்... காதலித்துப் பார்..

சரணம் - 1
----------------
ஆ: இமையடித்தாலும் இதயம் வலிக்கும்
வலிகளில் கூட வாசனை இருக்கும்
குழு: காதலித்துப் பார்.. காதலித்துப் பார்..
பெ: நரம்புக்கு நடுவே நதிகள் நகரும்
நதியிருந்தாலும் நாவே உலரும்
ஆ: தப்பு எல்லாம் கணிதமாகும்
தவறு எல்லாம் புனிதமாகும்
பெ: பச்சைத் தண்ணீர் வெப்பமாகும்
எச்சில் பண்டம் அமிர்தமாகும்
ஆ: நான்கு உதடு பேசும் வார்த்தை முத்தமாகும்

பெ: சுடும் நிலவு சுடாத சூரியன்.

சரணம் - 2
-----------------
பெ: மழைத்துளி நமக்கு சமுத்திரமாகும்
சமுத்திரம் எல்லாம் துளியாய்ப் போகும்
குழு: காதலித்துப் பார்.. காதலித்துப் பார்..
ஆ: சத்தியக் காதல் என்னமும் செய்யும்
சந்திர ஒளியை ஆடையாய் நெய்யும்
பெ: தொட்ட பாகம் மோட்சமாகும்
மற்ற பாகம் காய்ச்சலாகும்
ஆ: தெய்வம் தூங்கி மிருகமாகும்
மிருகம் தூங்கி தெய்வமாகும்
பெ: தேடல் ஒன்றே வாழ்க்கை என்று தெரிந்து போகும்

ஆ: சுடும் நிலவு சுடாத சூரியன்